உலர்பழ வாழை தோசை

உலர்பழ வாழை தோசை

Ingredients

  • 1 கப் கோதுமை மாவு
  • 1/2 கப் வெல்லம்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய்தூள்
  • 2 வாழை பழம்
  • 3 பாதாம்
  • 3 முந்திரி
  • 3 பிஸ்தா
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 2 கப் தண்ணீர்
  • 4 ஸ்பூன் எண்ணெய்

Directions

முதலில் கடாயில் பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்

பின்னர் அதனை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,நசுக்கிய வாழை பழம், அரைத்த உலர் பழ பொடி, ஏலக்காய் தூள்,வெல்லம், பின்ச் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்னர் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்

பின்னர் அடுப்பில் தோசை போல ஊற்றி நெய் அல்லது எண்ணெய் ஓரங்களில் ஊற்றி இரு புறமும் சமைக்கவும்

சுவையான உலர்பழ வாழை தோசை தயார்

LEAVE A REPLY

Login to comment